ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை  

இராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளனார் .இந்த தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெற்று வரும். 

இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்கியது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 9-ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு சிறப்புமிகு கொடியேற்றமும் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா மே 21-ம் தேதி மாலை தொடங்கி மே 22-ம் தேதி அதிகாலை மேலதான முழங்க யானைகள் அணிவிக்க,நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, ரதம் பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும். 

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா 22.05.2025 வியாழக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதனை ஈடு செய்யும் பொருட்டு 14.06.2025 சனிக்கிழமை வேலைநாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad