நான் முதல்வன் – சிகரம் தொடு திட்டத்திற்கு தேர்வாகி பயிற்சி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள்
காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இருந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுள் சிறந்த ஏழு மாணவர்களாக கணினி அறிவியல் துறையைச் சார்ந்த மாணவ மாணவிகள்
காயத்ரி, அனிஷா, அனுசுயா, தீப்திகா, பரத், இயற்பியல் துறையைச் சார்ந்த ஃபெய்துல் ஃபாத்திமா, மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையின் மாணவர் பிரவீன் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் திறனை மேலும் மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சியளித்து, தகுதி வாய்ந்த நிறுவனங்களில் பணிநியமன வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் – சிகரம் தொடு திட்டத்தின் கீழ் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 07.04.2025 முதல் 15 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தீப்திகா , பாரத், ஃபெய்துல் ஃபாத்திமா, பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். நான் முதல்வன் சிகரம் தொடு திட்டத்திற்கு தேர்வான மாணவர்களையும் , பயிற்சி பெற்ற மாணவர்களையும்,
கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளரும், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் முருகன், கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் சந்திரசேகரன், இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கவிதா, மற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக