திருப்பூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிசத் சார்பில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

திருப்பூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிசத் சார்பில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திருப்பூர் புதிய பேருந்து நிலையம்  அருகில் உள்ள ஸ்ரீ நகரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர்  பிரசன்னா தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திருச்செல்வம், மண்டல அமைப்பாளர் குமரவேல் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்வில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த அனைவருக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்,தேசப் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்போம் என  உறுதிமொழி ஏற்கப்பட்டது.  இதில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில்
50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad