தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் சித்திரை மாதஅம்மாவாசை அன்னதானம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் சித்திரை மாதஅம்மாவாசை அன்னதானம்


 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றங்கரை ஓரத்தில் மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற தில்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று வடை, பாயசத்துடன்  அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் நேற்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த அன்னதான நிகழ்ச்சியில் தாராபுரம் காங்கேயம் கோட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் கண்காணிப்பு குழு உறுப்பினரான சிவசங்கர், கவி ஸ்ரீ பிரின்டர்ஸ் உரிமையாளர் முனியப்பன், புளிய மரத்து கடை சாமி மெஸ் உரிமையாளர் பெருமாள் சாமி, பொன்ராம், பாத்திமா, பார்வதி, சந்தான லட்சுமி ஆனந்த், சாதிக், முத்துக்குமார், தாரா முரளி, ஜே.சி.பி வாகன உரிமையாளர் கார்த்திகேயன், ஷாஜகான், அப்பாஸ் அலி, மணி மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad