ஆண்டிபட்டியில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழா.
ஆண்டிபட்டி, ஏப் .28 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆண்டிபட்டி தேனி பிரதான சாலையில் ஜக்கம்பட்டியில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்கு மூத்த உறுப்பினர் நரி நாகேந்திரன் தலைமை தாங்கி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதன் பிறகு விழாவிற்கு வந்திருந்த கட்சி உறுப்பினர்கள் பாஜக கட்சியை வாழ்த்தியும், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியை வாழ்த்தியும் கோசங்களை எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் மூக்கையா, பரமன், ராமச்சந்திரன், ரமேஷ் குமார், நாகராஜ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக