பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா!

 பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா!
ராணிப்பேட்டை , ஏப் 27 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று ஆசிரியர் தின விழா மற்றும் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து (ம) பரதநாட்டிய நிகழ்வுடன் விழா தொடங்கியது நெமிலி வட்டாரத் தலைவர் தினகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சண்முகம் வரவேற்றார். அப்போது பணி நிறைவு பெறும் ஆசிரியர்களான பரத்குமார், ராதா, கலைவாணி உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 
இந்த நிகழ்வில்  மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாலாஜி, நெமிலி வட்டார வள  மைய மேற்பார்வையாளர் பாலு,  சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலும் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர் கள் பொன்னாடை இனிப்பு (ம) நினைவு பரிசுகள் வழங்கி  வாழ்த்துக்களை தெரிவித்து  வழங்கினார்.இதில் சங்க நிர்வாகிகள் சுந்தரேசன், சரஸ்வதி, தேவராஜன், விஜயகுமார், வெங்கடேசன், வீரபத்திரன், நியூட்டன்  காபிரியல், சண்முக வடிவேல், சிவகுமார், அபித் கிளமென்ட்  உள்ளிட்டோர் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் பலர் கலந்து     கொண்டனர்.மேலும் நிகழ்ச்சியில் முடிவில் தேசியகீதம் பாடி நிகழ்ச்சி முடிவு பெற்ற நிலையில் அறுசுவை விருந்து நடைபெற்றது பாராட்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வட்டார பொருளாளர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad