குடியாத்தத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

குடியாத்தத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!

குடியாத்தத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!
குடியாத்தம், மே 1 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வளத்தூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு தலைமை தாங்கினார் துணைத் தலைவர்  செல்வம் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலா ளர் ரேவதி வரவேற்றார் இதில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல் இணைய வழியில்  மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்து சுய சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி வழங்குதல் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குடிநீர் சிக்கனமாக 
பயன்படுத்துதல் குறித்தும் விவாதிக் கப்பட்டது இந்நிகழ்ச்சிகள் கிராம நிர்வாக அலுவலர் விஜயேந்திரன்  மற்றும் ஊர் நல அலுவலர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் O H T ஆபரேட்டர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad