மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம சேம்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம சேம்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம சேம்பள்ளி ஊராட்சியில்  நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பங்கேற்பு! 

குடியாத்தம் ,மே 1-

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேம்பள்ளி ஊராட்சியில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் 
வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.இந்த கிராம சபை கூட்டத்தில்  கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப் படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து கிராம சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. 
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித் ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம ஊராட்சிகள் தன்னி றைவு பெற வேண்டும் என்ற நோக் கத்தில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதில் ஒரு முக்கிய மான திட்டம் தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம். இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகளில் வீடு இல்லாத ஏழை பயனாளிகளுக்கு ரூபாய் 3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டி கொடுக் கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் கிராம ஊராட்சிகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
நம்முடைய வேலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கடந்த ஆண்டு 3000 வீடுகளும், இந்த ஆண்டு 4000 க்கும் அதிகமான வீடுகளும் கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது. குறிப்பாக சேம்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு 21 பயனாளி களுக்கும்,  இந்த ஆண்டு 25 பயனாளி களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கப் பட்டுள்ளது.  வீடு கட்ட தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள பயனாளிகள் விரைவாக வீடு கட்டும் பணிகளை தொடங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்குள்ளாக புது வீட்டிற்கு குடியேற வேண்டும்.மேலும் கிராம ஊராட்சிகளில் அரசின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு,  பழுதடைந்துள்ள பழைய வீடுகளை சீரமைப்பதற்காக ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேம்பள்ளி ஊராட்சியில் 18 வீடுகள் சீரமைக்க தேர்ந்தெடுக் கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மாணவ, மாணவிகள் நிச்சயம் கல்லூரி படிப்பை பயில வேண்டும் என தெரிவித்து, அதற்காக அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 1000/- ,  அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 1000/- வழங்கி வருகிறார்கள்.மேலும் நான் முதல்வன் எனும் ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் காலங்களிலேயே பல்வேறு விதமான திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் அவர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளி நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அரசு அலுவலர்கள் சென்று கணக்கீடு எடுத்து அப்பணிகளுக்கு இங்கிருந்து ஆட்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர்.  குறிப்பாக துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் செவிலியர் மற்றும் ஐடிஐ படித்த மாணவ,  மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக் கே சென்று பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மேண்மை அடைந்தால் தான் இந்த மாநிலம் மேம்படும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.   எனவே அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்  வி. அமுலு விஜயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், சேம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர்  துளசிராமுடு ,   ஒன்றியக்குழு உறுப்பினர்  பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad