கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே தினசரி தொடர் மின்வெட்டுகள் நாசரேத் பகுதியில் நிலவி வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது, பராமரிப்பு பணி என காரணம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஏப்ரல் 30 மதியம் 1 மணிக்கு நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில், இடி மின்னலுடன், கோடை மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் குறை அழுத்த மின்சாரத்துடன் இணைப்பு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மே 1 அதிகாலை மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டது. கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் மின்சார துண்டிப்பு காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும், மின்சார பழுதுகளை சரி செய்து நிரந்தர தீர்வு காண வேண்டி வணிகர் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக