கந்தசாமி மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

கந்தசாமி மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

கந்தசாமி மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் கந்தசாமி மருத்துவமனை, வசந்தம் மருத்துவமனை, கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வுக்கு கந்தசாமி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாபுராஜன் தலைமை வகித்தார். 

டாக்டர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், தென்குமரி கல்விக்கழக தலைவருமான பி.டி.செல்வகுமார் மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.மருத்துவமுகாமை தொடங்கி வைத்து பி.டி.செல்வகுமார் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் பணம், படிப்பு என்ற எண்ண ஓட்டத்திலேயே மக்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். 

ஆனால் உடல் நலத்தில் யாரும் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் எளிதாக தாக்குகின்றன. குறிப்பாக பெண்கள் தங்களது நோய்களை வெளியில் சொல்ல வெட்கப்படுகின்றனர். 
எனவே, கலப்பை மக்கள் இயக்கம் மாதம் தோறும் 5 இலவச மருத்துவ மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப்போன்று உடல் நன்றாக இருந்தால் தான் முதுமையிலும் இளமையாக வாழ முடியும். பணம், கல்வி என்பது ஒருபுறம் இருந்தாலும், உடல் நலத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என பேசினார். தொடக்க நிகழ்வில், மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், கொட்டாரம் பேரூர் தலைவர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் சம்பூர்ண தேராஜன், வரலெட்சுமி, அனிதா, கோயில்பிள்ளை, கார்மல், செந்தில்மோகன், செந்தில், முருகன், கணபதி, சுடலைமணி, ஏசுதாசன், சுபாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad