இருக்கன்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

இருக்கன்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

இருக்கன்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சியில் அமைந்துள்ள சேனார்குளம் கிராமத்தில்  இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு பல மசோதாக்கள் நிறைவேற்றினர். 

பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்விளக்கு வசதிகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பட்டன. 

சேனார் குளத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருகில் உள்ள பல  கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேற்படி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவரும் பயன் பெற்று மிகுந்த மன நிறைவுடன் திரும்பி சென்றனர். 

இதுபோல் வருங்காலங்களில் அடிக்கடி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad