ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவன வேலூர் கிளை முதுநிலை மேலாளர் பி.பிரபாகுமரன் பணிநிறைவு பாராட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவன வேலூர் கிளை முதுநிலை மேலாளர் பி.பிரபாகுமரன் பணிநிறைவு பாராட்டு விழா!

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவன வேலூர் கிளை முதுநிலை மேலாளர் பி.பிரபாகுமரன் பணிநிறைவு பாராட்டு விழா!
வேலூர் , ஏப் 30 -

வேலூர் மண்டல கிளை அலுவலகத்தின் வணிகப்பிரிவின் முதுநிலை மேலா ளராக பணியாற்றி இன்று பணி நிறைவு பெற்ற பி.பிரபாகுமரன் அவர்களுக்கு அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  மேலாளர் கலி தலைமை தாங்கினார்.அலுவலக அலுவலர்கள் அஸ்வின் ராஜ், தினகரன், புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித் தனர்.இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சேகர், ஓய்வுபெற்ற முதுநிலை மேலாளர் எஸ்.எம்.ஹாமேஷ்குமார், மேலாளரின் மனைவி ஜெ.கீதா, மகன் எ.பி.தருண், இந்திரகுமாரி, பட்டாபிராமன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.1987ஆம் ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்த பிராபாகுமரன் முதுநிலை உதவியாள ராகவும், கணக்கு அலுவலராகவும், உதவி மேலாளராகவும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முதுநிலை மேலாளராக (வணிகம்) பதவி உயர்பெற்றார்.  இவர் வேலூர், குடியாத்தம் மற்றும் சென்னை மண்டல அலுவலகத்திலும்,  அகத் தணிக்கை யராக பெங்களுர், கொச்சின், புனே,  வததோரா, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய மண்டல அலுவலகங்களிலும்  பணியாற்றியுள்ளார்.  மேலும் ஓரியண் டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகமான புதுதில்லி அலுவலகத்திலும் மூன்று முறை சிறப்பு தணிக்கை குழுவில் பணியாற்றினார்.  தற்போது வேலூர் மண்டல கிளை அலுவலகத்தின் முதுநிலை மேலாளராக பணியாற்றி இன்று பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.அலுவக பணியாளர்கள் கரிகாலன், வி.கே. கணேஷ், முகவர் வி.டி.ஆறுமுகம் மற்றும் வழக்கறிஞர்கள், முகவர்கள், கணக் கெடுப்பாளர்கள்,  விசாரணை அலுவலர்கள் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad