உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , ஏப் ‌30 -

நாச்சியார்குப்பம் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் களஆய்வு  மேற்கொண்டபோது அங்கன்வாடி பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரியம் படி இரண்டு கைகளை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும் என அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சிவ சௌவுந்தரவல்லி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சியார்குப்பம் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அப்பகுதியில் உள்ள நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த வருகை பதிவேடு ஆய்வு செய்தார். மேலும் நூலகம் பயன்பாடு குறித்து கேட்டு அறிந்தார். அதன்பின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளையும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து நியாயவிலை கடைக்கு சென்று அங்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அங்குள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஆவணங்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் அனைத்தும் பொது மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா எனவும் மேலும்  பஞ்சாயத்து தலைவரிடம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் பொது மக்களுக்கு சரியாக வழங்கப்படுகிறதா சரியான முறையில் வீடுகள் முடிக்கப்படுகின்ற னவா என கேட்டறிந்தார். மேலும் சரியான நபர்களுக்கு சென்றடையும் வகையில் கலைஞர் கனவு இல்லம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.அதன்பின் அங்கு அருகாமையில் இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் சென்று அங்கு குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார் மேலும் அங்குள்ள குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் சிவன்சவுந்தரவல்லிக்கு குட் மார்னிங் என சொன்னனார்கள் அப்போது அந்த குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியர் குட் மார்னிங் என சொல்வதை விட இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் என சொல்லி  தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறினார். மேலும் வீட்டில் பெற்றோர்களிடமும் அதனை பின்பற்ற வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங் கினார். அதனை தொடர்ந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே உள்ள கோயில் தூண்கள் மருத்துவ மனைக்கு செல்வதற்கு பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறாக உள்ளதால் அதனை இரண்டு நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என துறை சார்ந்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது  துறை துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
 
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad