10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியடைய அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பாபா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.
சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைய அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா சிவகங்கை நடைபெற்றது. இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி ஆகியோர் சிவகங்கை மாவட்ட அளவில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட சான்றிதழ்களை வழங்கினர். இவ்விழாவில் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி முதல்வர் மு. சாரதா, பட்டதாரி ஆசிரியர்கள் பூ. அலெக்ஸ்பாண்டி, ரா. சிவகாமி, ஆ. சந்தோஷினி, யா. ஆபிரகாம் ஆகியோர் 2024-25ஆம் கல்வியாண்டில் பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்களை அரசு பொதுத்தேர்வில் அறிவியல், கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களை 100% தேர்ச்சியடைய அர்ப்பணிப்புடன் செயல்பட்டமைக்கான பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் பெற்றுக்கொண்டனர். சான்றிதழ்கள் பெற்ற பாபா மெட்ரிக் பள்ளி ஆசிரிய பெருமக்கள் பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளி நிர்வாகி வெருமதி ஆர் மீனாட்சி ஆகியோரிடம் வாழ்த்துக்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக