மானாமதுரை நகராட்சி 27வது வார்டில் ஆபத்தான நிலையில் பழுதாகி உள்ள மின்கம்பம், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு எண் 27ல், 5வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதாகி கீழே விழும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை நேரில் சென்று மனு அளித்து ஒரு வாரம் ஆன நிலையில், இதுகுறித்து மின்வாரியம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டுகொள்ளாமலும், நேரில் சென்று பார்வையிடாமலும் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்று அப்பகுதி வார்டு பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இக்குறிப்பிட்ட ஆபத்தான மின்கம்பமானது கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டாலும், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரமாட்டார்கள் போல் தங்களுக்கு தெரிவதாக அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். எனவே மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக பழுதான மின்கம்பத்தை மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், மானாமதுரை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விலை மதிக்க முடியாத பொதுமக்களின் உயிரை கருத்தில் கொண்டு உடனடியாக அபாயகரமான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை சரி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக