கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அம்மாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
முன்னதாக பிரம்மமுகி தில்லை காளியம்மனுக்கு சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பம்பை இசை முழங்க , அம்மன், மையானகாளி, பச்சைகாளி ,பவளக்காளி, கருப்பசாமி, குறத்தி
ஆகிய வேடமிட்டு ஆடல் பாடலுடன் காளி நடனம் நடைபெற்றது பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பெண்கள் பாரம்பரிய முறைப்படி தாலாட்டுப் பாடலுடன் கும்மி அடித்து வழிபட்டனர்
தொடர்ந்து இரவு 12 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள 72 அடி உயர தில்லை காளி சிலைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது
நிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தே.தனுஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக