கலைஞர் கொடுத்த அரசு விளைநிலம் விற்பதை மீட்க வேண்டும் அரக்கோணத் தில் நடைபெற்ற ஜமாபந்தில் திமுக கவுன்சிலர் பிரசாத் கோரிக்கை மனு!
ராணிப்பேட்டை , மே 27 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்காவில் கிராம மக்களின் குறை தீர்க்கும் மூன்றாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர். ஜே. யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது . இந்த ஜமாபந்தில் அரக்கோணம் ஒன்றியம் தண்டலம் கைனுர் கிராம ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர். பி.பிரசாத் மாவட்ட ஆட்சியர். ஜே. யு. சந்திரகலா அவர்களை சந்தித்து வீட்டுமனையாக விற்கும் கலைஞர் கொடுத்த அரசு விளைநிலங்களை மீட்க வேண்டும் என மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் மேலும் கூறி இருந்ததாவது2006 ஆண்டு திமுக ஆட்சியின் போது முதல்வர் கலைஞர் பல்வேறு மக்களுக்கு அரசு விளை நிலங்களை அளித்தார். அந்த வரிசையில் அரக்கோணம் வட்டம், தண்டலம் கிராமத்தில் வசிக்கும் 10 பேருக்கு 8 ஏக்கர் நிலம் பகிர்ந்து கொடுத்தார். 30 வருடங்கள் விற்க வா வாடகை கொடுக்கவோ கூடாது என விதிமுறை விதித்திருந்தார் இந்த நிலையில் 7 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் வீட்டுமனைகளாக விற்கப் பட்டு வருகிறது. ஆகவே தவறுக்கு உட்பட்டும் ஐந்தேக்கர் விளை நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு கிராம பஞ்சா யத்து வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக