ரயில்வே சுரங்கப் பாதை பணிகள்
5 மாதத்தில் முடிக்க கோர்ட் உத்தரவு!
கலெக்டருக்கு நன்றி தெரிவித்த கைனூர் தலைவர் உமா மகேஸ்வரி!
ராணிப்பேட்டை , மே 27 -
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தாலுக்காவில் கிராம மக்களின் குறை தீர்க்கும் மூன்றாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை யில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தில் குறிப்பிட்ட சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் அவரவர் கிராம மக்களுக்கான குறை போக்கும் மனுக்களைகொடுத்து வருகின்றனர். ஆனால் ஆட்சியரை சந்தித்த கைனூர் ஊராட்சி மன்ற தலைவர். உமா மகேஸ்வரி கிராம மக்கள் சார்பில் நன்றி பாராட்டினார். அதன் விவரம் வருமாறு.
அரக்கோணம் நகருடன் இணைக்கும் கைனூர் கிராம சாலை ரயில்வே கேட் குறுக்கே உள்ளது. இந்த கேட்டினால் கைனூர் மக்கள் அவசர காலங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கிராமத் தலைவரின் முயற்சியால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி இரண்டு வருடங்களு க்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஒன்றரை ஆண்டு முன்பு சில தனியார் இடங்களால் சுரங்கப்பாதை பணி வழக்கு தொடர்பால் நிறுத்தபட்டு
பாதிக்கபட்டது. தற்போது நீதிமன்ற தீர்ப்பில் ஐந்து மாதங்களில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என உத்தரவு வழங்கியது. எனவே மக்களின் குறைதீர உதவிய மாவட்ட நிர்வாகத்தை பாராட்டி நன்றி தெரிவிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர். உமாமகேஸ்வரி மாவட்ட ஆட்சியரை பாராட்டினார் .உடன் வார்டு உறுப்பினர். துரைசாமி மற்றும் இளங்கோவன் ரமேஷ் கிராம அலுவலர். புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்,
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக