அருந்ததியினரின் பட்டா அரசு கணக்கில் கொண்டு வரவும் சாலை சீரமைக்க வேண்டியும் நடைபெற்ற ஜமாபந்தில் சித்தேரி தலைவர் கோரிக்கை மனு!
ராணிப்பேட்டை , மே 27 -
ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில் கிராம மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி மாவட்ட ஆட்சி தலைவர். ஜே. யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தில் குறிப்பிட்ட சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் அவரவர் கிராம மக்களுக்கான குறை
போக்கும் மனுக்களை கொடுத்து வருகின்றனர் அந்த வரிசையில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர். கலைஞ் செழியன் சித்தேரி மக்களுக்கான குறைகளை மனுவாக அளித்தார். அந்த மனுவில் அருந்ததி பாளையத்தில் வசிக்கும் 38 குடும்பத்தாருக்கு 1996 ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது ஆனால் அதனை அரசு கணக்கில் கொண்டு வராமல் இருப்பதால் அதனை அரசு கணக்கில் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். மற்றொரு மனுவில் சித்தேரி பரித்தி புத்தூர் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலையான கீழ்க்கண்டிகை அண்ணாநகர் வழி சாலைகள் மிக மோசமாக இருந்து வருகிறது. அதனை சீரமைத்து கொடுக்கவும் அதற்கான உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மனுவில் கிராம தலைவர். கலைஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வார்டு உறுப்பினர்கள். அருந்ததி மக்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக