10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் உள்ள 500 மதிப்பெண்களுக்கு பள்ளி அளவில் 495 மதிப்பெண்கள் பெற்று மாணவி எம். ஹன்சிகா வர்ஷினி சாதனை படைத்துள்ளார். அம்மாணவியை தொடர்ந்து மாணவி கே. யுவதர்ஷினி 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், 490 மதிப்பெண்கள் பெற்று மாணவி கே. விமலா மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் மாணவி எம். ஹன்சிகா வர்ஷினி அறிவியல் மற்றும் சமுக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு 100 மதிப்பெண்களும், கே. யுவதர்ஷினி மற்றும் கே. விமலா இருவரும் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூடுதலாக மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக