நீலகிரி மாவட்டம் உதகையில் 10 நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் 10 நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி


நீலகிரி மாவட்டம் உதகையில் 10 நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி.    


நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் மழையும் சூறாவளி காற்றும் மின்தடையும் ஏற்படுவதால் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதும் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது இதனால் குடிநீர் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது உதகையில் 18 வது வார்டு பத்து நாட்களாக குடிநீர் வழங்காததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் நகராட்சி அதிகாரிகளுக்கு அங்குள்ள மக்களின் நிலைமையை எடுத்து சொன்னதின் பேரில் நகராட்சி டேப் இன்ஸ்பெக்டர் திரு சங்கர் அவர்கள் ஏற்பாட்டில் தினமும் இரண்டு லோடு குடிநீர் லாரி மூலம் இப்பகுதிக்கு வழங்கி வருகின்றனர் இப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி கூறினார்.    


தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad