கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வர மங்கலத்தில் வீரனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பின்னர் புனித நீர் கலசம் கடம் புறப்பாடு ஊர்வலமாக கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு மந்திரங்கள் முழங்க ஸ்ரீ வீரனார் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக