தூத்துக்குடியில் கண்மாயில் மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றபோது நீரில் மூழ்கி பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி, அ.குமார ரெட்டியார்புரம், மேலத் தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் குருசாமி (62). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள கன்மாயில் மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற குருசாமி தண்ணீருக்குள் மூழ்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கண்மாயில் குருசாமியை தேடினார்கள் 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்பு குருசாமியை சடலமாக மீட்டனர். மேலும் அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக சிப்காட் காவல் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக