10ம் வகுப்பு பொது தேர்வில், மாவட்ட அளவில் கூலி தொழிலாளியின் மகள் முதலிடம். மருத்துவர் ஆவது தனது லட்சியம் என மாணவி பேட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஹன்சிகா வர்ஷினி 495 மதிப்பெண் பெற்று சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார் . கூலி தொழிலாளியின் மகளான ஹன்சிகா வர்ஷினியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களுக்கும் , தாய் மற்றும் சகோதரியுடன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார். ஆசிரியர்கள் மாணவிக்கு பரிசு வழங்கி கௌரவப்படுத்தி வாழ்த்தினர். ஆசிரியர் மற்றும் சகதோழிகள் என அனைவரும் ஊக்கபடுத்தியதால் தான் வெற்றி பெற முடிந்தது என்றும், பிளஸ் டூ தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பேன் எதிர்காலத்தில் எம்பிபிஎஸ் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை. 10ம் வகுப்பு பொது தேர்வுக்காக நிறைய மாதரி தேர்வுகள் எழுதி எழுதி பார்த்ததால் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது என்றவர். அதிகாலையில் எழுந்து படிப்பதும், நீண்ட நேரம் முழித்து படிப்த்ததால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக