காரைக்குடியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் R.B. உதயகுமார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

காரைக்குடியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் R.B. உதயகுமார்

 


ஸ்டாலின் ஆட்சியில் இந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை அவர்கள் வாங்கிய கடன் தான் கண்ணுக்கு தெரிகிறது காரைக்குடியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் R.B. உதயகுமார் கூறினார்


காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் புரட்சித் தமிழர் எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆட்சியின்  நான்கரை ஆண்டு சாதனைகளையும் . பொம்மை முதல்வர்ஸ்டாலின் ஆட்சியின் வேதனைகளையும் மாவட்ட அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக திண்ணை பிரச்சாரம் துண்டு பிரசுரம் வழங்கினார்  முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கழக அம்மா பேரவை செயலாளர் RB உதயகுமார் எம்எல்ஏ  இதில்   முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், கழக அமைப்புச் செயலாளர் சீனிவாசன்,

மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மு.இளங்கோவன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கற்பகம் இளங்கோ ,கே கே உமாதேவன்,மற்றும் மாவட்ட நகர அம்மா பேரவை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

ஸ்டாலின் ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை.

அவர்கள் வாங்கிய கடன் தான் கண்ணுக்குத் தெரிகிறது

நீட் தேர்வு ரத்து ரகசியம் "என் பாக்கெட்டில் உள்ளது" என்று முதல்வர் கூறினார்.

ஆனால் அவர் பாக்கெட்டில் வெறும் காலி பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது என்ற ஆர் பி உதயகுமார்,

கல்விக் கடன் ரத்து என்பது போன்ற

தேர்தல் வாக்குறுதி 525 ல் 90% நிறைவேற்றப்பட்டதாக அண்டப்புழுகு, ஆகாசபுழுகை ஸ்டாலின் கூறி வருகிறார் என்றும்,

மக்களின் குறைகளை சட்டசபையில் எடுத்துக் கூற முதல்வரும், சபாநாயகரும் அனுமதி மறுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad