இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்ற சுற்றுலா வேன் டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்ற சுற்றுலா வேன் டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்து.

இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்ற சுற்றுலா வேன் டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்து.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணங்கத்தான் கிழக்குக்கரை சாலை சந்திப்பில் ராமநாதபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பனைக்களம் ஊராட்சி பொன்குளம் கிராமத்தில் இருந்து சுற்றுலா வேனில் 20 பேர் சென்றனர். 

இந்த வாகனத்தை மனோஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.பட்டிணங்காத்தான் ஈசிஆர் சந்திப்பில் கீழக்க இருந்து வந்த போது டீசல் லாரியும் வேனும் மோதியதில் வேனில் வந்தவர்கள் 10 க்கும் பேற்பட்டோர்க்கு லேசான காயம் அடைந்தனர். 

உடனடியாக அங்கிருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் விபத்து பற்றி இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad