12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி பெற்று மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அசத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான இறுதி மதிப்பெண் முடிவுகள் வியாழக்கிழமையன்று வெளியான நிலையில், இப்பள்ளியில் 375 மாணவிகள் தேர்வு எழுதியதில், 356 மாணவிகள் தேர்ச்சி பெற்றதோடு, 95% தேர்ச்சியை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது பெற்றுள்ளது. மேலும் இப்பள்ளி மாணவி எம். அஸ்விதா மொத்தம் உள்ள 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடம் பெற்றார். அம்மாணவியை தொடர்ந்து மாணவி கே. ஜனனி 560 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமிடமும், எம். பிரியங்கா 558 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக