திருமாங்கல்யம் செய்த ஸ்தலத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் திருக்கல்யாண நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

திருமாங்கல்யம் செய்த ஸ்தலத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் திருக்கல்யாண நடைபெற்றது

 


திருமாங்கல்யம் செய்த ஸ்தலத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் திருக்கல்யாண நடைபெற்றது.



மதுரை மாவட்டத்தில் ஓவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுவர். அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்த தலம் திருமங்கலம் இங்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மீனாட்சி சொக்கநாதர் தரிசனம் செய்தனர். விழாவின்முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6மணிஅளவில் மீனாட்சி சொக்கநாதர் திருவீதி உலா வருகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருகோணமலையில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad