தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி பள்ளி மாணவியும், திருச்செந்தூர் வட்டார செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ஆர். வளர்செல்வனின் மகளுமான மாணவி ஆர்.வி.ஹரிணி அண்மையில் வெளியான 12ம் வகுப்பில் பொதத்தேர்வு ரிசல்ட் டில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவி ஹரிணி யை தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ரெ.காமராஜ் நாடார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சி யின் போது தூத்துக்குடி மண்டல தலைவர் வி. எம். வேலாயுத பெருமாள், மற்றும் மாணவியின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
.தமிழக குரல் செய்திகளுக்காக MT..அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக