நீலகிரி மாவட்டத்தில் முக்கியமான சந்திப்பு இடம் ஷேரிங் கிராஸ் பகுதியாகும் இங்கு அமைந்துள்ள ஆதம்ஸ் நீரூற்று இதைப் பற்றிய சுவாரசியமான தகவல்.
உதகை சேரிங் கிராஸ் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதம்ஸ் நீரூற்று சிலை 1880/1881 ஆம் ஆண்டு அப்போதைய மதராசபட்டின மேதகு ஆளுநர் வில்லியம் பேட்ரிக் ஆதம்ஸ் அவர்களது நினைவாக பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூபாய் 13000/ 14000/= மூலம் நிறுவப்பட்டது. இதன் மாதிரி வடிவம் மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் திரு முபாரக் அலி அவர்களால் மூன்று மாதங்களில் செய்து முடிக்கப்பட்டு அதை இன்று சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு பார்வைக்கு இன்று127 வது மலர் கண்காட்சியில் வைத்து சுற்றுலா பயணிகளின் மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக