திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி திருக்கோவிலில் 34-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா ஆதி மூல சற்குரு வீரபோக வசந்தராயர் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகளின் தலைமையில் அன்னை அன்னபூரணி முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம்,நித்ராஹோமம்,திரிபுராசுந்தரி ஹோமம்,ஆலினி துர்கா ஹோமம்,நவகிரக ஹோமம் நடைபெற்றது.பெருந்துறை கார்த்திகேய சிவம் யாக பூஜை நடத்தினார்.
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் MLA மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தமிழ்நாடு சிவசேனா மாநில செயல்தலைவர் கே.சசிகுமார், பொங்கலூர்பிரபஞ்சானந்த தெய்வசிகாமணி சுவாமிகள்,நீதிபதி ஆறுமுகம், ஆன்மீக நெறியாளர் டாக்டர் ஜெய்லானி, ஸ்ரீ விசுவாமித்திர சுவாமிகள்,தவத்திரு மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள், ஆந்திரா மாநிலம் வராகி அம்மன் உபாசரர் ஜோதி, மாநில சிவசேனா மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, கோவை பார்வதி அம்மா, கோவை மாட்ட சிவசேனா மகளிர் அணி தலைவி ஹரிஹர சுதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள்.
முன்னதாக ஆன்மீக நெறியாளர் டாக்டர் ஜெய்லானி "மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆய்வு புத்தகம் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்றார். அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டன.ஏராளமான பக்தர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக