திருப்பூரில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

திருப்பூரில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்


 

மே 18 நாளை  இனப்படுகொலை நாளாக நாம் தமிழர் கட்சியினர் நினைவு கூறும் வகையில் பொதுக்கூட்டம் மற்றும் குருதிக்கொடை முகாம் உப்பில்லா கஞ்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி

திருப்பூர் நாம் தமிழர் கட்சியின்

குருதிக்கொடை பாசறை  சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் நினைவாகவும், மறைந்த திருப்பூர் 108 குணா அவர்கள் நினைவாகவும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள் இந்த நிகழ்வில் மாநில மண்டல மாவட்ட பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த குருதிக்கொடை முகாமை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் குருதி நன்கொடை கொடுத்தவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் பிஸ்கட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழககுரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad