127 ஆவது மலர்கண்காட்சியை துவங்கி வைத்த தமிழக முதல்வர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

127 ஆவது மலர்கண்காட்சியை துவங்கி வைத்த தமிழக முதல்வர்

 


127 ஆவது மலர்கண்காட்சியை துவங்கி வைத்த தமிழக முதல்வர்


நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று 15 05 2025 அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வின் போது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேஷ் வேளாண்மை உற்பத்தி  ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி இ ஆ ப, வேளாண்மை துறை இயக்குனர் பா முருகேஷ் இ ஆ ப, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பெ. குமாரவேல் பாண்டியன், இ ஆ ப, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ ஆ ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த மலர் கண்காட்சி ஆனது உதகமண்டலத்தில்  வருடம் வருடம் நடைபெறுவதால்  சுற்றுலா பயணிகளுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அது மட்டும் இன்றி பல்வேறு வெளியூர்களில் இருந்து  மக்கள் வருகை தருவதால் உதகமண்டலம் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனா தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திபிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad