உளுந்தூர்பேட்டையில் மின்வாரியப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சீருடை வழங்கல்
உளுந்தூர்பேட்டை உப கோட்டத்தில் நகரம் உளுந்தூர்பேட்டை கிராமிய மேற்குமற்றும் செங்குறிச்சி ஆகிய பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாகப் பணியாற்றுவது குறித்து உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் விரிவாக பயிற்சி அளித்தார் பணியின் போது எர்த் ராடுகள் கையுறைகள் இடுப்பு கயிறு மற்றும் வோல்டேஜ் சென்சார் கருவி ஆகியவற்றை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் மேலும் மின்வாரியப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார் இந்த நிகழ்வில் இளநிலை பொறியாளர்கள் ராமச்சந்திரன் செல்லப்பிள்ளை, முகவர்கள் சுரேஷ் சுப்பிரமணியம் சண்முகம் சேட்டு வெங்கடேசன் பெரியசாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக