இராமநாதபுரம் மாவட்டத்தின் 1434 பசலிக்கான(ஜமாபந்தி) 20.05.2025 தேதி முதல் 29.05.2025 தேதி வரையில் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 1434 வருடத்திற்க்கான வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி)மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், தலைமையில் முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டதிற்கு உட்பட்ட ஏழு வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி)20.05.2025 அன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் தெற்கு உள்வட்டத்தை சேர்ந்த சித்திரங்குடி சோனைப் பிரியான் கோட்டை, ஏனாதி, கண்டிலான், இளஞ்செம்பூர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது மற்றும் சேந்நனேரி ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.
இதில் மேற்கண்ட கிராம கணக்குகளுக்கான அடங்கல்,பட்டா மாறுதல்கள் உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத்,தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிட நலத்துறை) ஸ்ரீதரன் மாணிக்கம், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) மரகத மேரி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக