இராமநாதபுரம் மாவட்டம் கழுவுரணி, வாணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கஜினி நகர் இப்பகுதியில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வணிக வளாகம் அருகில் பழுதடைந்த மின்கம்பம் உள்ளது இந்த மின் கம்பத்தை மாற்றுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கொண்டு வந்து கிடப்பில் போட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் மாற்றாமல் உள்ளது..
பல முறை அலுவலகத்தில் தகவல் கொடுத்தும் மாற்றால் கிடப்பில் போடப்ட்டுள்ளனர். தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது மேலும் பழுதடைந்த மின்கம்பம் விபத்து ஏற்படுத்தும் முன் பயன்பாட்டில் உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் கோரிக்கை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக