நெய்வேலி அறிவு திருக்கோயிலின் 16வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

நெய்வேலி அறிவு திருக்கோயிலின் 16வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 19-ல் அமைந்துள்ள நெய்வேலி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோவிலின் 16 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது 

உலக சமுதாய சேவா சங்க இயக்குனர் உழவன் 
மா.தங்கவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார் 

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் நெய்வேலி அறிவு திருக்கோயில் தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது இங்கு யோக கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது 

மேலும் அரச பள்ளிகளில் பயலும் மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாக பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு யோக கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

மேலும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சியின் பலனாக நடைபெற்று முடிந்த 12-ம் மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை பயனடைந்துள்ளனர்

மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் யோக பயிற்சியை மேற்கொள்வதினால் சுகப்பிரசவம் அதிகம் நடைபெற்று வருவதாகவும் 
தொடர்ந்து யோக பயிற்சி மேற்கொள்வதினால் உடல் மற்றும் மனம் ஒருநிலைப்படுவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உலக சமுதாய சேவா சங்க விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் அருள்ஜோதி , நெய்வேலி அறிவு திருக்கோயில் அறங்காவலர் நந்தகுமார் உள்ளிட்ட நெய்வேலி அறிவு திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
தே.தனுஷ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad