அரக்கோணத்தில் நடைபெற்ற குரு நினைவு தினம்! வன்னியர் சங்கம் அஞ்சலி!
ராணிப்பேட்டை ,மே 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர சுவால் பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த வன்னியர் சங்கம் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தின் காவலராக பணியாற்றிய காடுவெட்டி குருவின் (எம் எல் ஏ ) ஏழாவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது இதனை முன்னிட்டு அன்னாரது உருவபடம் வன்னியர் சங்க கட்டிடத்தின் முன் மலர்களால் அலங் கரித்து வைக்கப்பட்டது அந்த பட அஞ்சலி கூட்டம் மாவட்ட துணை செயலாளர் ஜே மணி தலைமையில் நடைபெற்றது. நகர துணைச் செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். வன்னியர் சங்க நகர தலைவர் AM சீனிவாசன் அனைவரை வரவேற்றார். இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் களாக மாவட்ட வன்னியர் சங்க செயலா ளர் கார்த்திக் மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை மேற்கு ஒன்றிய தலைவர் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் கூட்டத்தில் பிரபாக ரன் தமிழ்மணி ரஞ்சித் பிரசாந்த் மோகன் முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு ஆகி யோரும் கலந்து கொண்டு குரு படத் திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக