இளம் சாதனையாளர் விருது பெற்ற கிரினித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

இளம் சாதனையாளர் விருது பெற்ற கிரினித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


தர்மபுரியிலுள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளின் ஒருங்கிணைப்பில்,தர்மபுரி ஜூனியர்  சேம்பர்  அமைப்பும் இணைந்து இன்று தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற'வளர்ந்து வரும் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான   விருது வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன்,மகாலக்ஷ்மி திரு.வெங்கடேஷ்வரன்,கோவை சஞ்ஜீவனம் குருகுலம் மெய்ஞானவழிகாட்டி  திரு சசிக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  கலந்துகொண்டு விருதுகள் வழங்கினர்.


இந்த விழாவில்,நீலகிரி மாவட்டம்,நஞ்சநாடு,கப்பத்தொரைப்பகுதியைச் சேர்ந்த திருமதி.பவித்ராவின் மைந்தர் கிரினித் தொடர்ந்து வரலாற்றுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிற இவருக்கு 'இளம் சாதனையாளர் விருது'வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


இளம் சாதனையாளர் விருது பெற்ற கிரினித் தற்போது பெங்களூரிலுள்ள ஆர்க்கிட் சர்வதேசப் பள்ளியில் ஒன்பதாம் பயின்று வருகிறார்.ஏற்கனவே,"இந்தியா புக் ரெக்கார்ட்ஸ்,சைல்டு  புரோடிகி  விருது உள்ளிட்ட பல விருதுகளை  பெற்றவர் என்பதும்,வரலாற்று துறையில் அனைத்து தகவல்களை தெளிவாக எடுத்துக் கூறுவதிலும் திறமை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும்,


நீலகிரி மாவட்ட  ஆட்சித் தலைவரின் பாராட்டுதலை பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


இளம் சாதனையாளர் விருது பெற்ற கிரினித் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad