+2 தேர்வில் 594 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்- கணிதம், கணினி அறிவியலில் 100/100 மதிப்பெண்கள்!
திருப்பத்தூர் , மே 8 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவன் நரேஷ், பிளஸ் டூ தேர்வு முடிவில் 600 க்கு 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம் மற்றும் கணினி அறிவியல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், தமிழில் 99 மதிப் பெண் ,ஆங்கிலத்தில் 98 மதிப்பெண், இயற்பியலில் 98 மதிப்பெண்ணும், வேதி யலில் 99 மதிப்பெண்ணும் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் அதேபோல் அதே பள்ளியில் படிக்கும் கபிலன் என்ற மாணவன் 593 மதிப் பெண்கள் எடுத்து மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
செய்தியாளர்
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக