வேலூர் கலெக்டர் அலுவலகத்திலேயே "பி"பிளாக்கில் ஊழியர்களுக்கு குடிக்க RO தண்ணீர் இல்லாமல் பெரும் அவதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலேயே "பி"பிளாக்கில் ஊழியர்களுக்கு குடிக்க RO தண்ணீர் இல்லாமல் பெரும் அவதி!

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலேயே "பி"பிளாக்கில் ஊழியர்களுக்கு குடிக்க RO தண்ணீர் இல்லாமல் பெரும் அவதி! 

வேலூர் மாவட்டம் , மே 8 -

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், "பி" பிளாக் வளாகம், வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே வி குப்பம், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு என ஆறு தாலுகாவாக உள்ளது. இந்த நிலை யில் இந்த ஆறு தாலுகாவில் பல இடங்க ளில் குடிநீர் பிரச்சினை இருந்தால்,குடிநீர் வசதி வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத் திடம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமககள் முறையிடுவார்கள், அவர்களுக்கு
வேண்டிய குடிநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுவார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே '' பி" ளாக்கில் ஊழியர் களுக்கு குடிக்க RO குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து குடிக்க குடிநீர் தாராளமாக வழங்கும் விதத்தில் இந்த ஆர்.ஓ இயந்திரம் மற்றும் பழுதான நிலைகளை உடனடியாக இந்த இயந் திரத்தை பழுதுபார்த்து சரி செய்து, இந்த "பி" பிளாக்கிற்கு குடிநீர் வழங்க உதவி புரிமாறு  ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad