அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2022 2023 ஆம் ஆண்டு வேளாண்மை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடம் மற்றும் புதிய நியாய விலை கடை திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2022 2023 ஆம் ஆண்டு வேளாண்மை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடம் மற்றும் புதிய நியாய விலை கடை திறப்பு!

 அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2022  2023 ஆம் ஆண்டு வேளாண்மை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடம் மற்றும் புதிய நியாய விலை கடை திறப்பு!
குடியாத்தம் , மே 21 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சின்ன தோட்டாளம் ஊராட்சி யில்  சுமார் 10,91000 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண்மை பொருள்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடம் மற்றும் சுமார் 12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மேரி வீரப்பன் ராஜ் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் சாந்தினி விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன் உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே‌ வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad