தூத்துக்குடி- 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் என்னென்ன படிக்கலாம். - ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

தூத்துக்குடி- 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் என்னென்ன படிக்கலாம். - ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளிலிருந்து 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதி செய்வது, அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது.

எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.

இதில் குறிப்பாக, நமது மாவட்டத்தில் உள்ள 57 அரசுப் பள்ளிகளில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியானவர்களாகவுள்ளனர். அதன்படி, இன்றையதினம் அவர்களையெல்லாம் அழைத்து தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டது. 

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. 

எனவே, மாணவர்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து ஆர்வமுடன் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். ஆகையால் ஒவ்வொரு மாணவர்களும் உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து நன்கு பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.

மேலும், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் சேரக்கூடிய தொழிற்கல்விப் படிப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு கல்லூரிகளைத் தேர்வு செய்வது, தேர்வுசெய்யக்கூடிய பாடப்பிரிவுகள், அந்தந்த துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். 

மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்கல்விப் படிப்புகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்திலும் கட்டுப்பாட்டு அறையின் 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ - மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad