தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த தனியே ரயில் நிலையம் அருகில் இடம் உள்ளது. வாகன நிறுத்தும் இடத்திற்கு ஏலம் எடுத்து நடத்தி வரும் வருபவர்,
நாசரேத் ரயில் நிலையத்திற்கு வரும் இரு சக்கர வாகனங்களை தானே சென்று சங்கிலி போட்டு கட்டி வைத்து வாகன ஓட்டிகளை மிரட்டி வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாசரேத் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்ட போது எவ்வித பதிலும் கூறாமல் சென்று விட்டனர் என பாதிக்க பட்ட நபர் கூறியுள்ளார்.
மேலும் வாகன நிறுத்துமிடத்தை வாடகைக்கு எடுத்தவர் இரு சக்கர வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூல் செய்வது எந்த வகையில் சரி என்று பலரும் இது குறித்து பேசி வருகின்றனர். ரயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுக்குமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக