போதையில் ஓட்டி வந்த கார் மோதி மூன்று பேர் காயம் - வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

போதையில் ஓட்டி வந்த கார் மோதி மூன்று பேர் காயம் - வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு.

போதையில் ஓட்டி வந்த கார் மோதி மூன்று பேர் காயம் - வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு.


தூத்துக்குடியில் போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதியதில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் 3பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. 

தூத்துக்குடி விஇ ரோட்டில் சுகம் ஓட்டல் அருகே உள்ள நடைபாதை பகுதியில் தினமும் காலை ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக காத்து நிற்பார்கள். இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் மது போதையில் ஒருவர் ஓட்டி வந்த கார் நடைபாதையில் ஏறி அங்கு நிறுத்தியருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி அருகே இருந்த டீக்கடை மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.‌ இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மத்திய பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad