'உழவரைத் தேடி வேளாண்மைத்துறை' திட்டத்தின் கீழ் விவசாய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக 'உழவரைத் தேடி வேளாண்மைத்துறை - உழவர் நலத்துறை' என்ற மாபெரும் திட்டத்தினை தொடங்கி வைக்கப் பெற்றதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாகுடி மற்றும் மேலச்சொரிக்குளம் ஆகிய கிராங்களில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி சிறப்பித்து, தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த. சேங்கைமாறன், வேளாண்மை துணை இயக்குனர் திருமதி பத்மாவதி, வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி மலர்விழி தோட்டக்கலைத்துறை இயக்குனர் திருமதி சர்மிளா, வேளாண்மைத்துறை உதவி பொறியாளர் திருமதி விஜயராணி, வேளாண்மை உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக், செல்வகுமார், செல்லதுரை, மாளவிகா, மேற்பார்வையாளர் வேளாண்மை விற்பனை மஸ்தான் அலி, அய்யனன், மலைச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், அரசு அலுவலகங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராமப்புற விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக