தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கிளை) சார்பில் பொது குழு கூட்டம்!
ராணிப்பேட்டை ,மே 30 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ( கிளை ) சார்பில் மாவட்ட சிறப்பு செயற் குழு , பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தரேசன், , மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆற்காடு வட்டார செயலாளர் நியூட்டன் கேப்ரியல் வரவேற்றார். மாவட்ட பொரு ளாளர் முருகன் நிகழ்ச்சியின் தொகுப்பு ரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் களாக, மாநில தலைவர், அரசு மாநில பொதுச் செயலாளர் குணசேகரன்,மாநில பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வாழ்த் துரை வழங்கி யவர்கள்,திமிரி வட்டார தலைவர் தினகர், திமிரி வட்டார செயலா ளர் சண்முகம் அரக்கோணம் வட்டார செயலாளர் சண்முக வடிவேல், திமிதி வட்டார செயலாளர் சிவக்குமார்வாலாஜா மேற்கு வட்டார செயலாளர், அபித் கிள மெண்ட்.நன்றியுரை ,மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன்.மேலும் இதில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர், வெங்க டேசன முன்னாள் மாவட்ட தலைவர், வெங்கட்ராமன்.இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வுதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துக,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்து உடனடியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக,போன்ற பல்வேறு தேர்வு தீர்மானங்கள் நீரோட்டப் பட்டது.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக