தாராபுரம் அருகே கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை.. அலங்கியம் காவல்துறையினர் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

தாராபுரம் அருகே கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை.. அலங்கியம் காவல்துறையினர் விசாரணை.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட,  உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சாட்டு விழா  இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கோவிலை சுற்றி அம்மனை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர். 


அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு விழுந்து அப்பகுதியில் இருந்த விஷ தேனி கூடு கலைந்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களை கொட்டி தீர்த்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் விஷ தேனி கொட்டியதில் பாதிப்படைந்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் 5 பேருக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. இதுகுறித்து அலங்கியம் காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad