தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் படி, 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் படி, 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் படி, 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை  தொடக்கம்! 

குடியாத்தம் , மே 31 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி, 2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 03.06.2025 அன்று முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே இக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்க் கைக்கான 1088 இடங்களும், இந்த ஆண்டு தமிழக அரசால் கூடுதலாக வழங்கப்பட்ட 270 சேர்க்கை இடங்கள் வரப்பெற்றுள்ளது. (1088 270 = 1358) மற்றும் இரண்டாவது சுழற்சியில் தொடங்கவுள்ள பாடப்பிரிவுகள் B.Sc. Computer Science, BCA, BBA மற்றும் B.Com - தமிழ் வழியில் (T/M) சிறப்புப்பிரிவினருக் கான கலந்தாய்வுடன் தொடங்கப்பட
உள்ள இக்கலந்தாய்வு கீழ்காணும் நாட்க ளில் துறைவாரியான முதற்கட்ட கலந் தாய்வு நடைபெற உள்ளது.
03.06.2025
சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு. விளையாட்டு மற்றும் தேசிய படையில் சிறப்பிடம் பெற் றவர்கள். மாற்றுத் திறனாளிகள், படை வீர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தி னரின் வாரிசுதாரர்கள்.
04.06.2025
 B.A. Tamil Shift-1 (T/M) B.A. English Shift-1-(E/M)
05.06.2025
பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 50 மதிப்பெண் (சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு) பெற்றிருக்க வேண்டும்.
 B.Com Shift - 1, (E/M), Shift - II (T/M, E/M), BBA Shift-I & II (E/M) கட் ஆப் மதிப்பெண் 250 முதல் 400 வரை
09.06.2025 :
அனைத்து அறிவியல் பாடப்பிரிவு கட்ஆ கட் ஆப் மதிப்பெண் 250 முதல் 400 வரை B.Sc. Maths, Shift-I & II (T/M, E/M), B.Sc. Physics, Shift-I (T/M, E/M), B.Sc. Chemistry, Shift -I & II (T/M, E/M), B.Sc. Botany, Shift-I & II (T/M, E/M), B.Sc. Zoology, Shift -I (T/M E/M), 3.Sc. Computer Science Shift-I & II (E/M), BCA Shift-I & II (E/M)
10.06.2025:
B.A., History Shift-I (T/M) B.A., Economics Shift-1 & II (T/M, E/M), கட் ஆப் மதிப்பெண் 250 முதல் 400 வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடம் தவிர்த்து பிற பாடங்களில் எடுத்துள்ள மதிப் பெண் களின் கூட்டுத்தொகை 250க்கும் மேல் உள்ள மாணவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி உடையோர் ஆவர்.
1 இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம்,
2 மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்/
3. 10, 11, 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்
4.ஆதார் அட்டை
5. சாதி சான்றிதழ்
6. கடவுச்சீட்டு அளவு புகைப்படம்-2
மேற்குறிப்பிட்ட ஆவணங்களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக் கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad