கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே வெய்யலூர், வாழைக் கொல்லை, ஓடாக் கநல்லூர், வடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கான பன்னீர் கரும்புகள் பயிரிட்டு வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் கடந்த காலங்களில் 400 ஏக்கருக்குமேல் பொங்கல் கரும்புபயிரிட்டு வந்த நிலையில் பிறகுஅது 300 ஏக்கர்,200 ஏக்கர் எனக் குறைந்து தற்போது 50 ஏக்கர் பயிர் செய்யும் அளவுக்கு பன்னீர்கரும்பு விவசாயம் சுருங்கி விட்டது. பயிர் செய்வதற்கு செலவாகும் அளவு கூடுதலாக இருக்கிறதாகவும், விளைந்த கரும்புகளை விற்று எடுக்கும் லாபம் மிகவும் சொற்பமாக இருப்பதாகவும் வரவை விட செலவு கூடுதலாக இருக்கும் காரணத்தால் தாங்கள் பயிரிடும் பொங்கல் கரும்பின் பரப்பளவை படிப்படியாக குறைத்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பன்னீர்கரும்பு என்றதும் இனிப்பு சுவை ஞாபகத்தில் வரும். ஆனால் அதைப் பயிரிடும் விவசாயிகளோ மனக்கசப்பில் தான் உள்ளனர் .இப்பகுதியில் பன்னீர் கரும்பின் சாகுபடி முழுவதும் அழிந்து விடாமல் தடுக்க அரசு பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சில உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டுமாய் இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்
Post Top Ad
சனி, 31 மே, 2025
Home
கடலூர்
பன்னீர் கரும்பு விவசாயம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை.
பன்னீர் கரும்பு விவசாயம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக